×

லால்குடி அருகே அதிமுக அமைப்புத் தேர்தலில் கோஷ்டி மோதல்: இருபிரிவாக பிரிந்து ரகளை, நாற்காலி வீச்சு

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அதிமுக கட்சி அமைப்பு தேர்தலில் இரு தரப்பினர் இடையே மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு நிலவியது. ஆங்கரை ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக பதவி வகிக்கும் முன்னாள் எம்.பி.யும், தற்போதைய மாவட்ட கழக செயலாளருமான குமாருக்கு எதிராக சில வேட்புமனு தாக்கல் செய்ய முற்பட்டுள்ளனர். இதன் காரணமாக குமார் ஆதரவாளர்களுக்கும், குமாருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக-வினருக்கும் இடியே மோதல் ஏற்பட்டது.

அப்போது நாற்காலிகளை தூக்கி வீசி ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை விபரீதம் அடையும் முன்னே சம்பா இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனை என்பதால் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் ஜி.டி.கிருஷ்ணன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.       


Tags : Koshdi ,Lalkudi , Lalgudi, AIADMK, organization election, faction, riot, chair distribution
× RELATED லால்குடி அருகே ரயிலில் பயணம் செய்த இளைஞர், தவறி கீழே விழுந்து படுகாயம்